சரணடைந்த எவரும் கொலை செய்யப்படவில்லை : கோட்டாபய ராஜபக்ஷ்
சரணடைந்த எந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களும் கொலை செய்யப்படவில்லை என பாதுக்காப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார். மனிதாபிமான நடவடிக்கைகளின் உண்மைப் பகுப்பாய்வு என்ற தலைப்பிலான அறிக்கை தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ் இன்று சர்வதேசத்தினருக்கும் பொதுமக்களுக்கும் விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், சரணடைந்தவர்களின் குடும்பத்தினரை நன்கு பராமரித்த அரசு, ஏன் சரணடைந்தவர்களை கொலை செய்ய வேண்டும் எனவும் அவ்வாறான தேவை அரசாங்கத்துக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் இலங்கையின் நற்பெயருக்கு பங்கம் ஏற்படுத்தும் நோக்குடனும் சமாதானத்தை கெடுக்கும் நோக்குடனுமே முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 11000 தமிழீழ விடுதலைப் புலிகளைச் சேர்ந்த முன்னாள் போராளிகள் மறுவாழ்வழிக்கப்பட்டு சமூகத்தோடு ஒன்றிணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி வரை வடபகுதிக்கான மருத்துவ பொருட்கள்யாவும் சீராக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply