சானல் 4வுக்கு இலங்கை அரசின் பதில் வீடியோ

சானல் 4 தொலைக்காட்சியில் கடந்த காலங்களில் வெளியான விவரணப் படங்களில் இலங்கைப் படையினர் பெருமளவு போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. இப்போது ‘லைஸ் அக்ரீட் அப்ஒன்’ என்ற தலைப்பில், அதாவது, சனல் 4 இல் வெளியான விவரணப்படத்தை பொய்களாலானது என்று பிரசாரம் செய்யும் பாணியில் ஆங்கில மொழியிலான விவரணப் படமொன்று தற்போது இலங்கை அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

சானல் 4 இல், இலங்கை அரசாங்கமும் படையினரும் புரிந்துள்ளதாக கூறப்பட்ட பல குற்றச்செயல்களை மறுக்கும் இந்த படம், வீடியோ காட்சிகள் போலியாக தொகுக்கப்பட்டு, உண்மையானவையாக காட்டப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளது.

தற்போது, இலங்கை அரசின் பொறுப்பில் முகாம்களில் இருக்கின்ற முன்னாள் போராளிகள், விடுதலைப் புலி தலைவர்களின் குடும்பத்தினர், முன்னர் அரசாங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டிருந்த வன்னிப் பிரதேசத்து மருத்துவர்கள், விடுதலைப் புலிகளின் ஊடகத்துறை பொறுப்பாளராக இருந்து பின்னர் அரசிடம் சரணடைந்த தயா மாஸ்டர் மற்றும் இன்னும் சில பொதுமக்கள் என பலரின் கருத்துக்களுடன் இலங்கை அரசு சார்பில் வெளியாகியுள்ள விவரணம் படம் வெளியாகியுள்ளது.

வன்னிப் பகுதியில் போர் உச்சமடைந்த கட்டத்தில், பாதுகாப்பைக் காரணம் காட்டி ஐநா அலுவலகத்தை அங்கிருந்து வெளியேறுமாறு அரசாங்கத்தால் கூறப்பட்டபோது, விடுதலைப்புலிகளின் கட்டாயப்படுத்தலின் பேரிலேயே, அங்கிருந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தியதாக இந்தப் படம் காட்டியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply