கொழும்பை பாதுகாக்க மேலதிக பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்புக் கடமையில்
கொழும்பு நகரின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள தாகவும் இதற்காக மேலதிக பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர கூறினார்.
கிளிநொச்சி முழுமையாக மீட்கப் பட்டுள்ளதையடுத்து புலிகள் கொழும்பிலும் அண்டிய பகுதிகளிலும் தாக்குதல் நடத்தலாம் என்பதாலேயே கொழும்பு நகரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மீட்கப்பட்ட நேற்று முன்தினம் விமானப்படை தலைமையகத்தின் முன்பாக தற்கொலைத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ரயில், மற்றும் பஸ்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக அவர் கூறினார். கொழும்பு நகரின் பாதுகாப்பிற்கென முக்கிய இடங்கள் மற்றும் வீதிகளில் வீடியோ கெமராக்களை பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply