அமெரிக்க விமான ஊடுருவலின் உண்மை வெளிப்படவேண்டும்: ஜே.வி.பி.
அமெரிக்க போர் விமானங்கள் இலங்கை வான் பரப்பிற்குள் அத்துமீறி ஊடுருவியதன் பின்னணியில் அரசாங்கத்திற்கு ஒப்பந்த ரீதியிலான இணக்கப்பாடு உள்ளதா? என்று கேள்வி எழுப்பியுள்ள ஜே.வி.பி. போலியாக நடிக்காது உண்மை நிலையை நாட்டிற்கு உடனடியாக அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். என்று வலியுறுத்தியுள்ளது. சர்வதேச சட்டங்களை மீறி வேறு ஒரு நாட்டின் எல்லைக்குள் செல்ல அமெரிக்காவிற்கு அதிகாரம் இல்லை. அவ்வாறெனில் இலங்கையின் தரை, கடல் மற்றும் ஆகாயம் என்பவற்றை எவ்வாறு அமெரிக்கா பயன்படுத்த முடியும் என்றும் ஜே.வி.பி.வினா தொடுத்துள்ளது.
இது தொடர்பாக நேற்று திங்கட்கிழமை ஜே.வி.பி. வெளியிட்ட விசேட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; அமெரிக்காவின் விமானங்கள் அனுமதியின்றி இலங்கை வான் பரப்பில் ஊடுருவியுள்ளன. அதனை விமானப் படையின் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். ஒரு நாட்டின் வான் எல்லையை அனுமதியின்றி பயன்படுத்த எந்தவொரு நாட்டிற்கும் அனுமதியில்லை. அவ்வாறு செயற்பட்டிருந்தால் அது சர்வதேச சட்டத்தை மீறும் செயலாகும். அது மட்டுமன்றி இலங்கையின் சுயாதீன தன்மைக்கும் இறையாண்மைக்கும் அச்சுறுத்தலான விடயமாகும்.
என்வே அமெரிக்க போர் விமானங்களின் ஊடுருவல் பாரிய விடயமாகும். இந்த சம்பவத்தினால் இலங்கை வாழ் மக்களும் குழப்ப நிலையிலேயே உள்ளார்கள். ஆகவே உண்மை நிலையை நாட்டிற்கு அரசு வெளிப்படுத்த வேண்டும்.
அமெரிக்க படைகளுக்கு இலங்கையின் நிலம், கடல் மற்றும் ஆகாயத்தை பயன்டுத்துவதற்கு அதற்கான அனுமதியை வழங்கும் வகையில் 2007 ஆம் ஆண்டில் இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கும் மேற்படி போர் விமானங்கள் ஊடுருவதற்கும் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. ஆகவே நாட்டு மக்களுக்கு அரசாங்கம் முறையான விசாரணைகளை மேற்கொண்டு உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply