அவசரகாலச் சட்டம் 80 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை நேற்று சபையில் 80 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 110 வாக்குகளும் எதிராக 30 வாக்குகளும் கிடைக்கப்பெற்றதையடுத்து மேலதிக வாக்குகளால் பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி சபையில் அறிவித்தார். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜனநாயக தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply