அரசாங்கத்தின் பதிலுக்காக காத்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவிப்பு
அரசாங்கத்தின் பதிலுக்காக காத்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.அண்மையில் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட யோசனைத் திட்டங்களுக்கு வழங்கப்படும் பதிலின் அடிப்படையில் பாராளுமன்றத் தெரிவுக்குழு பற்றிய தமது நிலைப்பாட்டை வெளியிட முடியும் கட்சி அறிவித்துள்ளது.மூன்று நிபந்தனைகள் அடங்களாக அண்மையில் யோசனைத் திட்டமொன்று முன்வைக்கப்பட்டதாகவும் இது தொடர்பில் சாதகமான பதில் ஒன்றை எதிர்பார்ப்பதாகவும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
எமது பிரச்சினைகளை அரசாங்கம் ஆரோக்கியமான முறையில் நோக்கினால் நாமும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
துரதிஸ்டவசமாக இதுவரையில் அரசாங்கம் சாதகமான பதில் எதனையும் அளிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அதிகாரப் பகிர்வு தொடர்பில் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்துவில் அரசாங்கம் கூடுதல் நாட்டம் காட்டவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ போன்றவர்கள் வெளியிட்டு வரும் கருத்துக்கள் அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply