வைத்தியசாலைகள் புனரமைப்புக்கு ஜப்பான் 400 கோடி ரூபா உதவி
தள வைத்தியசாலைகள் மற்றும் மாகாண பிரதான ஆஸ்பத்திரிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்துவதற்காக 400 கோடி ரூபா நிதி உதவி வழங்க ஜப்பான் அர சாங்கம் முன்வந்துள்ளது. இது தொடர்பாக சுகாதார அமைச்சிற்கும் ஜப்பான் சர்வதேச ஒத்து ழைப்பு முகவரமைப்பு பிரதிநிதிக ளுக்குமிடையில் ஒப்பந்தம் கைச்சாத் திடப்பட்டதாக சுகாதார அமைச்சு கூறியது.
இதன்படி மேற்படி ஆஸ்பத்திரி களின் பெளதீக வளங்களை அதிக ரிக்கவும் உட்கட்டமைப்பு வசதி களை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தவிர, இந்த ஆஸ்பத்திரிகளின் வார்டுகள் திருத்தப்பட்டு தேவையான மருத்துவ உபகரணங்களும் வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியது. இந்தத் திட்டத்தின் கீழ் வடக்கு கிழக்கிலுள்ள ஆஸ்பத்திரிகளும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
நிதி அமைச்சின் செயலாளர் பீ. பீ.ஜெயசுந்திரவின் தலையீட்டையடுத்தே ஜப்பான் அரசு மேற்படி நிதி உதவியை வழங்க முன்வந்துள்ளது.ஆஸ்பத்திரிகள் மேம்படுத்துவதோடு நோயாளிகளுக்கு மேலும் சிறந்த சேவையளிக்க முடியும் என நம்பப்படுகிறது. 400 கோடி நிதி உதவி பெறுவது தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடும் வைபவத்தில் சுகாதார அமைச்சின் பதில் செயலாளர் பாலித மஹிபால, பிரதிப் பணிப்பாளர் சந்ரசிறி, ஜய்கா நிறுவன பிரதி நிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply