சட்டத்தை கையிலெடுக்கும் பொதுமக்கள் மீது நடவடிக்கை: கோத்தபாய
பொலிஸாரின் கையில் இருக்க வேண்டிய சட்டத்தை கையிலெடுத்து செயற்படும் பொதுமக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இவ்வாறு பொதுமக்கள் சட்டத்தை கையிலெடுத்துக் கொள்வதால் பல்வேறு விபரீதங்கள் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமீப காலமாக கிறீஸ் மனிதர்கள் விவகாரம் தொடர்பாக பொதுமக்களும் பொலிஸாரும் தாக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். ஊறணிப் பகுதியில் யானைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மற்றும் அரசாங்க அதிகாரிகளை கிறிஸ் பூதங்கள் என்று தவறாக நினைத்துக் கொண்ட கிராமமக்கள் தாக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறாக பொலிஸார் கையில் இருக்க வேண்டிய சட்டத்தை பொதுமக்கள தமது கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply