தமிழீழம் மலரும் என்றால் ஆட்சியை இழக்கத்தயார் என்றவன்: கருணாநிதி

1956 ம் ஆண்டிலேயே சிதம்பரம் தி.மு.க. பொதுக்குழுவிலே அண்ணா முன்னிலையில் இலங்கைத் தமிழர்களுக்கான தீர்மானத்தை முன்மொழிந்தவனே நான்தான் என தி.மு.க தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி பதில் அறிக்கை:-

கேள்வி: தி.மு.க. ஆட்சியிலே இலங்கைத் தமிழர்களுக்காக நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளையெல்லாம் பேரவையில் ஜெயலலிதா சுட்டிக் காட்டி, அவைகள் எல்லாம் கண் துடைப்பு நாடகங்கள் என்று குறிப்பிட்டிருக்கிறாரே?.

பதில்: 1956 ம் ஆண்டிலேயே சிதம்பரம் தி.மு.க. பொதுக்குழுவிலே அண்ணா முன்னிலையில் இலங்கைத் தமிழர்களுக்கான தீர்மானத்தை முன்மொழிந்தவனே நான்தான். 24.08.1977 அன்று சென்னை மாநகரிலே ஒரேநாள் அறிவிப்பில் 5 லட்சம் பேரைத் திரட்டி இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக பிரம்மாண்டப் பேரணி நடத்தக் காரணமாக இருந்தவனும் நான்தான்.

2006 ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மாத்திரம் 7.12.2006 அன்றும், 23.4.2008 அன்றும், 12.11.2008 அன்றும், 23.1.2009 அன்றும் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக பேரவையில் தீர்மானங்களை முன் மொழிந்தது நான்தான்.

14.10.2008 அன்று இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக தலைமைச் செயலகத்தில் அனைத்துக்கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டியதும் நான்தான்.

15.10.2008 அன்று பிரதமருக்கு இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து கடிதம் எழுதியதும் நான்தான். 13.11.2008 அன்று உணவுப் பொருட்கள், துணிவகைகள் மற்றும் மருந்து பொருட்களை இலங்கைத் தமிழர்களுக்காக கப்பல் மூலம் அனுப்பி வைத்ததும் நான்தான்.

2009 ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்காக சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது இலங்கையிலே தமிழ் ஈழம் மலரும் என்றால், அதற்காக ஆட்சியை இழக்கக் கூட நாங்கள் தயார் என்று அறிவித்தவன் நான்தான். இவ்வாறு அறிக்கையில் கலைஞர் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply