யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்
யாழ்ப்பாணம் நாவாந்துறை மற்றும் பாசையூர் பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி யாழ்ப்பாணத்திலுள்ள மனித உரிமைகள் ஆணைக் குழு அலுவலகத்துக்கு முன்பாகவும் யாழ் சிறைச்சாலைக்கு முன்பாகவும், மக்கள் நேற்று ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தனர்.
பாதுகாப்புத் தரப்பினருக்கும், பொதுமக்களுக்குமிடையில் இடம்பெற்ற முறுகல் நிலையைத் தொடர்ந்து நாவாந்துறை, பாசையூர் பகுதிகளைச் சேர்ந்த 102 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் இருவர் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஏனையவர்கள் தொடர்ந்தும் விசாரணைக்காகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை விடுவிக்கக் கோரி நூற்றுக் கணக்கானவர்கள் மனித உரிமைகள் ஆணைக் குழுவின் அலுவலகத்துக்கு முன்பாகவும் யாழ் சிறைச்சாலைக்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். எனினும், கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply