சட்டத்தை கையில் எடுத்தவர்களை கைது செய்தோம்
மக்கள் சட்டத்தை கையில் எடுத்தமையினாலேயே நாங்கள் கைது செய்தோம் என யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நெவில் பத்மதேவா தெரிவித்தார்.
இன்று செவ்வாய் கிழமை யாழ். இராணுவ சிவில் அலுவலகத்தில் நேற்று நாவாந்துறை பகுதியில் நடைபெற்ற அசாதாரண சூழ்நிலை தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
சட்டத்தை மீறி நாங்கள் வேலை செய்யவில்லை. மக்கள் சட்டத்தை கையில் எடுத்தார்கள் அதனால் நாங்கள் அவர்களைக் கைது செய்தோம் அவர்கள் சட்டத்தை கையில் எடுக்க முடியாது.
நாவாந்துறை சம்பவத்தின் போது மக்களினால் பொல்லுகள், சைக்கிள் செயின், ரீயூப் லைட், கல்லுகள் என்பவற்றைக் கொண்டு பொலிஸார் மீது தக்குதல் நடத்தினர். அதன் போது நான்கு பொலிஸார் காயமடைந்துள்ளனர் இரண்டு பொலிஸ் வாகனம் சேதமாக்கப்பட்டுள்ளது.
அரசியல் வாதிகளின் பின்புலத்துடன் திட்டமிட்ட செயற்பாடாகவே நாம் இதனை கருதுகின்றோம். சமாதானத்தை ஏற்படுத்த சென்ற பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நிச்சயமாக இது ஒரு திட்டமிட்ட செயற்பாடு என்றார்
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply