யாழ் உயர் பாதுகாப்பு வலயங்களில் மீள்குடியமர அனுமதி: இமெல்டா
யாழ் குடாநாட்டில் காணப்படும் உயர் பாதுகாப்பு வலயங்களில் முன்னர் வாழ்ந்த மக்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ளதாக அரசாங்கம், உச்ச நீதிமன்றில் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விவசாயிகளினால் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பான விசாரணைகளின் போது யாழ்ப்பாண அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
யுத்த காலத்தில் உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட தமது பூர்வீக நிலங்களில் மீளக் குடியேறுவதற்கு அனுமதி அளிக்கப்பட வேண்டுமென குறித்த விவசாயிகள் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
முன்னாள் உயர் பாதுகாப்பு வலயங்களில் 35968 குடும்பங்களைச் சேர்ந்த 111199 பேர் மீள் குடியேற்றப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
இதில் 11879 குடும்பங்கள் தெள்ளிப்பழையைச் சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் குறித்த வழக்குத் தொடர்பான தீர்ப்பினை எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 17ம் திகதி அறிவிப்பதாக குறிப்பிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply