முல்லைத்தீவில் மர்ம மனிதர் நடமாட்டம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் நான்கிற்கும் மேற் பட்ட கிராமங்களில் மர்ம நபர்களின் நடமாட்டம் இருப்பதாகத் தெரிவித்துள்ள மக்கள் இரவில் குடும்பம் குடும்பமாக தங்கி வாழ்வதாகவும் அப்பிரதேசங்களில் அச்சமான சூழல் தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
தண்ணீரூற்று, குமிழமுனை, நீராவிப்பிட்டி, முள்ளியவளை போன்ற பகுதிகளில் கடந்த வாரம் முதல் இவ்வாறான மர்ம மனிதர்களின் நடமாட்டம் இருந்து வருகின்றது.
குமிழமுனை கிராமத்திலுள்ள கண்ணி வெடி அகற்றும் தொண்டு நிறுவனமொன்றின் அலுவலகத்திற்குள் மர்ம மனிதன் ஒருவன் புகுந்துள்ளான். அதனை அவதானித்த குறித்த நிறுவனத்தின் காவலாளி கூச்சலிட்டதைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளான். இந்தச் சம்பவம் இடம்பெற்ற தினத்திற்கு முதல்நாள் நீராவிப்பிட்டி கிராமத்திலுள்ள முஸ்லிம் சமய மதகுரு ஒருவரின் வீட்டின் கதவை தட்டிய சிலர் ஜன்னல் கதவுகளையும் திறந்துள்ளனர். இதனால் வீட்டில் இருந்தவர்கள் விழிப்படைந்துள்ளனர். அதனால் மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மேற்கூறப்பட்ட நான்கு கிராமங்களிலும் அயல் கிராமங்களிலும் தொடர்ச்சியாக மர்ம மனிதன் நடமாட்டம் இருந்து கொண்டிருப்பதாகவும் கிராமங்களில் விழிப்புக்குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ள போதும் மக்கள் குடும்பம் குடும்பமாக தங்கியிருப்பதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply