இலங்கை விவகாரத்தில் சர்வதேச தலையீட்டுக்கு உசிதமான காலமல்ல

இலங்கை விவகாரத்தில் சர்வதேச சமூகம் தலையீடு செய்வதற்கு உசிதமான காலம் இதுவல்ல. உள்நாட்டு ரீதியான தீர்வுத் திட்டமொன்றே நாட்டில் அமுல்படுத்தப்பட வேண்டுமென இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். உலகின் ஏனைய அனைவரை விடவும் இலங்கை மக்களின் தேவைகளை அரசாங்கம் அறிந்து வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பெங்களுரில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை விவகாரத்தில் சர்வதேச சமூகம் தலையீடு செய்வதற்கு உசிதமான காலம் இதுவல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டு வரும் அநேகமான குற்றச்சாட்டுக்கள் தொலைக்காட்சி விவரணங்களாகவும் அறிக்கைகளாகவுமே அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். எனினும், இவற்றை சரியான முறையில் உறுதிப்படுத்த முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மக்களின் நல்வாழ்விற்காக பெரும்பான்மையான புலம்பெயர் மக்கள் உதவிகளை வழங்கி வருவதாகவும், மேற்குலக நாடுகளிலும், தமிழகத்திலும் வாழும் ஒரு சில புலம்பெயர் தமிழர்கள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் பின்னரான நிலைமைகளை பயன்படுத்தி மக்களுக்கு சுபீட்சமான எதிர்காலத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதமளவில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply