தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு அனைத்துக் கட்சிகளும் பாராளுமன்றத்தில் ஒன்றிணைய வேண்டும்: திஸ்ஸ விதாரண

வெறும் பேச்சுவார்த்தைகளை மாத்திரம் முன்னெடுப்பதால் அரசியல் தீர்வு எட்டிவிடாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் சிநேகபூர்வமாக கலந்தாலோசித்து தமிழ் மக்களுக்கு சம உரிமைகளை வழங்க அனைத்து அரசியல் கட்சிகளும் பாராளுமன்றத்தில் ஒன்றிணைய வேண்டும் என்று சர்வகட்சிக்குழுக்களின் தலைவரான அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

அரசியல் தீர்வு காலத்தின் தேவையாக உள்ளது. இதனை இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் அவதானத்துடன் கையாள்கின்றன. எனவே, முரண்பாடுகளை தவிர்த்து இணக்கப்பாடுகளுடன் தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வுக் காணப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தொடர்ந்தும் கூறுகையில், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் கடந்த பல வருடங்களாக பேசப்பட்டு வந்தது. தற்போது யுத்தம் முடிந்துள்ள நிலையில் விரைவான தீர்வை ஏற்படுத்துவதில் அனைத்து தரப்புகளும் வெளிப்படையாக செயற்பட வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அரச தரப்பினர் முன்னெடுத்து பேச்சுவார்த்த தற்போது இடைநடுவே கைவிடப்பட்டுள்ளது.

இது நாட்டின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானதாக அமையாது. தெரிவுக் குழு ஊடாக தீர்வை ஏற்படுத்துவது சாத்தியமானதான விடயமாகும். எனவே பாராளுமன்ற தெரிவுக்குழுவில் கூட்டமைப்பு மற்றும் ஐ.தே.க உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் வெளிப்படையாக செயற்பட முன் வர வேண்டும். பல தீர்வுத் திட்டங்கள் ஏற்கனவே முன் வைக்கப்பட்டுள்ளன.

எனவே வெறுமனே பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்காது தீர்க்கமான முடிவுகள் அரசியல் தீர்வில் எடுக்கப்பட வேண்டும். தேசிய அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தச் சட்டம் உள்ளது. அல்லது சர்வக் கட்சி குழுவின் தீர்வுத் திட்டம் உள்ளது. இவற்றின் ஊடாக பேச்சுக்களை முன்னெடுத்து விரைவாக தேசிய பிரச்சினைக்கு தீர்வுக்காணவேண்டும். கூட்டமைப்பினர் இன்றி தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதென்பது சாத்தியமற்ற விடயமாகும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply