கிளிநொச்சியில் 30,000 இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
அரசாங்கப் படைகளால் மீட்கப்பட்டிருக்கும் கிளிநொச்சிப் பகுதியில் சுமார் 30,000 இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக இலங்கை இராணுவத்தினரால் கிளிநொச்சிக்கு அழைத்துச்செல்லப்பட்ட ஊடகவியலாளர் தெரிவித்திருப்பதாக த ஹின்டு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கிளிநொச்சி மீட்கப்பட்டதைத் தொடர்ந்து சர்வதேச மற்றும் உள்ளூர் ஊடகவியலாளர்கள் குழுவொன்றை இராணுவத்தினர் கிளிநொச்சிக்கு அழைத்துச் சென்றிருந்தனர். கிளிநொச்சியில் பொதுமக்கள் எவரும் இல்லையெனவும், கட்டடங்கள் இடிபாடடைந்த நிலையில் காட்சியளிப்பதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் சுமார் 30,000 இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அடிக்கொருவர் நிறுத்தப்பட்டிருப்பதுடன், மீட்கப்பட்ட பிரதேசத்தில் புதைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகள் மீட்கப்பட்டு, பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது” என ஹின்டு பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி நகரில் பெரும்பாலான கட்டடங்களின் கூரைகள், கதவுகள், ஜன்னல்கள் கழற்றப்பட்டிருப்பதுடன், அங்கு பொதுமக்கள் எவரும் இல்லையெனவும், பொதுமக்களால் விட்டுச்செல்லப்பட்ட கால்நடைகளே காணப்படுவதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கிளிநொச்சி நகரில் அமைக்கப்பட்டிருந்த 40 அடி நீளமாக பிரதான நீர் தாங்கி சக்திவாய்ந்த குண்டுகளால் வெடிக்கச் செற்றப்பட்டு வீழ்த்தப்பட்டிருப்பதாகவும், மின் கம்பிகள் அறுக்கப்பட்டு மின்விநிநியோகம் துண்டிக்கப்பட்டிருப்பதாகவும் கிளிநொச்சி சென்றிருக்கும் இந்திய ஊடகவியலாளர் கூறியுள்ளார்.
கிளிநொச்சியில் விடுதலைப் புலிகள் செய்திருக்கும் அழிவுகளுடன் ஒப்பிடும்போது காசாவில் பெரிதாக ஒன்றும் இல்லை” என கிளிநொச்சியிலுள்ள இராணுவ உயர் அதிகாரியான ஜெகத் டயஸ் தம்மிடம் கூறியதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவை நோக்கி இடம்பெயருமாறு கிளிநொச்சி கைப்பற்றப்படுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னரே விடுதலைப் புலிகள் பொதுமக்களுக்குப் பணிப்புரை வழங்கிவிட்டார்கள் எனவும் அந்த இராணுவ அதிகாரி கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளால் பொதுமக்கள் பலவந்தமாக இடம்பெயரச் செய்யப்பட்டுள்ளனர். எனினும், முல்லைத்தீவை நோக்கி நாங்கள் முன்னேறும் போது மறைவிடங்களில் தங்கியிருக்கும் பொதுமக்கள் வெளியேறுவார்கள் என நாம் நம்புகிறோம். 90ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்திலும் இவ்வாறானதொரு நிலையே காணப்பட்டது என ஜெகத் டயஸ், கிளிநொச்சிக்கு அழைத்துச்செல்லப்பட்ட ஊடகவியலாளர்களிடம் கூறியதாக த ஹின்டு செய்தி வெளியிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply