படையினர் கிளிநொச்சியை விடிவித்ததை புகழ்ந்து பாதுகாப்பு அமைச்சில் நிகழ்ச்சி
கிளிநொச்சியை விடுவித்ததை படையினரை பாராட்டும் முகமாக இன்று காலை பாதுகாப்பு அமைச்சில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய மேலதிகச் செயலாளர்(அபிவிருத்தி) விலி கமகே கூறியதாவது நல்ல தகமையான தேசிய தலைமைத்துவத்தின் கீழ் கிளிநொச்சியை படையினர் கைபற்றியது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என தெரிவித்தார்.
இவ்வாறு அணைத்து அரசாங்க அலுவலகங்களிலும் படையினரின் வெற்றியை போற்றி நிகழ்சிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இன் நிகழ்வில் தேசியக் கொடியை உயர்த்தி தேசிய கீதம் இசைத்து நாட்டுக்காக உயிரை துறந்த படைவீரர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலியையயும் செலுத்தினர்.
குப்பியாவத்த ஜெயசேகர ஆலய பிரதான சங்க நாயக,அதிபூச்சிய மாவறல்லை பத்திய தேரரினால் இங்கு படைவீரர்களுக்காக நல்லாசி வேன்டி பூஜாவும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மேலும் உரையாற்றிய மேலதிகச் செயலாளர் பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு பாதுகாப்புச் செயலாளர் கோடாபாய ராஜபக்ஷ அவர்களின் தலைமைத்துவம் சரியான பாதையில் சென்று கொன்டிருக்கின்றது எனத் தெரிவித்தார்.
படைவீரர்களுக்கு வீட்டுத்திட்டம், பாடசாலை என்பன அமைத்து படையினரின் ஆர்வத்தை மேம்படுத்துவதுடன் பாதுகாப்புச் செயலாளரின் திட்டமானது படையினரின் நலன்களில் உள்ள அக்கரையையும் எடுத்துக்காட்டுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தநிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் சிவில் மற்றும் படை அதிகாரிகளும் கலந்து கொன்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply