அரசியல் ரீதியிலேயே இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்: ஜப்பான் வலியுறுத்துகிறது

அரசியல் தீர்வே இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரே வழியென இலங்கைக்குப் பாரியளவு நிதியுதவிகளை வழங்கும் நாடான ஜப்பான் தெரிவித்துள்ளது. 
 
அரசியல் ரீதியாகவே இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றை முன்வைக்க முடியும்” என ஜப்பான் வெளிவிவகார அமைச்சின் இலங்கை விவகாரத்துக்குப் பொறுப்பான அதிகாரி ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்குக் கூறியுள்ளார்.

இலங்கையின் வடக்கு, கிழக்குப் பிராந்தியங்களில் சுதந்திரத்தை நிலைநாட்டி அதன் ஊடாக அரசியல் தீர்வொன்றுக்குச் சென்று, இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என ஜப்பான், கோரிக்கை விடுக்கிறது என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

எனினும், இலங்கை அரசாங்கத்திடம் ஜப்பான் இன்னமும் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுக்கவில்லையெனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் கிழக்குப் பிராந்தியக் காட்டுப் பகுதிக்கும் பிரச்சினைகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது” என ஜப்பானிய வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply