பிளேக்கின் இலங்கை விஜயத்துக்கு அறிவிப்பு வரவில்லை
அமெரிக்காவின் ஆசிய மற்றும் தென் மத்திய விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்க அமைச்சர் ரொபேர்ட் ஓ பிளேக்கின் இலங்கை விஜயம் குறித்து இதுவரை எவ்வித அறிவிப்பும் வரவில்லை என இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் பிரதி இராஜாங்க அமைச்சர் ரொபேர்ட் ஓ பிளேக் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயத் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையிலேயே, அமெரிக்காவின் பிரதி இராஜாங்க அமைச்சர் ரொபேர்ட் ஓ பிளேக்கின் இலங்கை விஜயம் குறித்து இதுவரை எவ்வித அறிவிப்பும் வரவில்லை என இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் ஊடக அதிகாரி கிறிஸ்ரொபர் எல்ம்ஸ் கூறியுள்ளார்.
இலங்கைக்கு கடந்த 29ஆம் திகதி விஜயம் செய்யவிருந்த ரொபேர்ட் ஓ பிளேக் அமெரிக்காவைத் தாக்கிய சூறாவளியால் தனது பயணத்தை இறுதி நேரத்தில் பிற்போட்டிருந்தார்.
எனினும் அவர் எதிர்வரும் 12ஆம் திகதி கொழும்புக்கு செல்லவுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் சண்டே ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், அமெரிக்காவின் பிரதி இராஜாங்க அமைச்சர் ரொபேர்ட் ஓ பிளேக்கின் இலங்கை விஜயம் குறித்துஇதுவரை அறிவிக்கப்படவில்லை என இலங்கைக்கான அமெரிக்கத் துதரகத்தின் ஊடக அதிகாரி தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply