சாம்பூர் அனல் மின்நிலைய உடன்படிக்கை கைச்சாத்து
திருகோணமலை, சம்பூரில் அனல் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய இரண்டாவது நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தை அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் இன்று செவ்வாய்க்கிழமை காலை இந்திய, இலங்கை அதிகாரிகளினால் கையொப்பமிடப்பட்டது. இந்தியா என்.டி.பி.சி நிறுவனத்தின் தலைவர் அருப் ரோய் மற்றும் இலங்கை மின்சார சபைத் தலைவர் விமலரத்ன அபேவிக்கிரம ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
இந்நிகழ்வில் வலு மற்றும் சக்தி அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
500 மெகா வோட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் செயன்திறனை நோக்காக அமைக்கப்படவுள்ள இந்நிலையத்தின் வேலைத்திட்டத்திற்காக 500 மில்லியன் டொலர் ஒதுக்கிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இத்திட்டம் 2016 ஆம் ஆண்டு நிறைவடையும் என எதிர்ப்பார்கக்ப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply