புதுடில்லி குண்டு வெடிப்பு; ஜனாதிபதி அனுதாபம்
புதுடில்லியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்தும் காயமடைந்தவர்கள் தொடர்பாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்குடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இந்த சம்பவம் குறித்து ஆழந்த அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார்.
இந்தியத் தலைநகர் தில்லியில், உயர்நீதிமன்ற வளாகத்தின் வாசலில் நடந்த ஒரு குண்டுத் தாக்குதலில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டனர், 60 பேர் காயமடைந்துள்ளனர். நீதிமன்ற வளாகத்திற்குள் வருவோர் சோதனை செய்யப்படும் வாசலில் ஒரு சூட்கேசில் இந்த குண்டு வைக்கப்பட்டிருந்ததாக நம்பப்படுகிறது.
இந்தக் குண்டுத் தாக்குதலை தாங்களே செய்ததாக ஹர்க்கத் உல் ஜிகாத் இஸ்லமி என்ற தீவிரவாதக் குழு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருக்கிறது.
அந்த மின்னஞ்சலில் இந்திய நாடாளுமன்றத் தாக்குதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அப்சல் குருவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படக் கூடாது என்று கூறியிருப்பதாக தெரிகிறது. இதை மிகவும் கவனத்துடன் எடுத்துக்கொள்வதாக இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.
இத்தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ள ஹர்க்கதுல் ஜிஹாத் இ இஸ்லமி அமைப்பு சுருக்கமாக ஹுஜி என்று சொல்லப்படுகிறது
அல் கயீதாவுடன் தொடர்பு வைத்திருப்பதாக நம்பப்படும் இந்த அமைப்பு, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் தாக்குதல்களை நடத்தியிருப்பதாக அமெரிக்க ராஜாங்கத் துறை கூறுகிறது.
ஹைதராபாத்தில் 2007ம் ஆண்டு மசூதி ஒன்றில் நடந்த தாக்குதலையும் , அதற்கு முன்னர் 2006ல் வாரணாசியில் நடத்தப்பட்ட தாக்குதலையும் இந்த அமைப்புதான் நடத்தியது என்று அமெரிக்க ராஜாங்கத்துறை கூறுகிறது.
இந்த அமைப்பின் தலைவர் இலியாஸ் காஷ்மீரி, கடந்த ஜுன் மாதத்தில் வடமேற்கு பாகிஸ்தானில் நடத்தப்பட்ட ஒரு ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply