திங்களன்று பிளேக்-சம்பந்தன் சந்திப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுத் தலைவருமான இரா. சம்பந்தன் அமெரிக்காவின் தெற்காசியாவுக்கான இராஜாங்க செயலாளர் ரொபேட் ஓ. பிளேக்கை எதிர்வரும் 12 ஆம் திகதி சந்தித்து உரையாடவுள்ளார்.
கொழும்பு வரவிருக்கும் தெற்காசிய பிராந்திய துணை இராஜாங்க அமைச்சர் ரொபேர்ட் பிளேக் முன்னதாக புதுடில்லியில் இந்திய தலைவர்களை சந்திப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் 12 ஆம் திகதி காலை 7.10 மணிக்கு நடைபெறும் இச்சந்திப்பில் பல்வேறு விடயங்கள் பற்றி இராஜாங்க செயலாளருடன் சம்பந்தன் உரையாட விருப்பதாக தெரியவருகிறது.
கடந்த மாத பிற்பகுதியில் வரவிருந்த பிளேக், தவிர்க்க முடியாத காரணத்தினால் இலங்கை விஜயத்தை ஒத்திவைத்தார்.
அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதன் பின்னரான காலப்பகுதியில் இலங்கையின் நிலைவரம் தொடர்பில் கண்டறிவதற்கு வருகை தரும் பிளேக் இலங்கையில் தாம் சந்திக்கவுள்ள நிகழ்ச்சிப்பட்டியலில் இரா.சம்பந்தனை சந்திப்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டிய விடயமென தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இச்சந்திப்பின் போது தமிழ் பேசும் மக்களின் பல்வேறு விடயங்கள் பற்றி சம்பந்தன் விரிவாக பேசவுள்ளதாக தெரியவருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply