வடக்கில் மீட்கப்பட்ட பகுதிகளில் விரைவில் உள்ளூராட்சித் தேர்தல்:அமைச்சர் ஜனக பண்டார
பயங்கரவாதத்திடமிருந்து மீட்கப்பட்டுள்ள வட மாகாணத்தில் விரைவில் உள்ளூ ராட்சிச் சபைத் தேர்தலை நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக உள்ளூ ராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்தார்.
தேர்தல் நடத்துவதற்கான முன்னோடி நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படு மென தெரிவித்த அவர், இது தொடர்பிலான சட்ட மூலத்தில் ஏற்கனவே திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதால் எவ்வித சிக்க லுமின்றி இதற்கான ஏற்பாடுகளை முன்னெ டுக்க முடியுமெனவும் தெரிவித்தார்.
வடக்கின் பெரும்பாலான பகுதிகள் பயங்கரவாதத்திலிருந்து மீட்கப்பட் டுள்ளன. அங்கு இயல்பான நிர்வாகத்தை ஏற்படுத்தி மக்கள் தேவை களைப் பெற்றுக் கொடுக்க உரிய நேரத்தில் உயரி நடவ டிக்கைகளை முன்னெடுப்பதே அரசாங்கத் தின் நோக்க மெனவும் அமைச்சர் தெரி வித்தார்.
இதேவேளை, கொழும்பிலிருந்து ஓமந்தை வரைக்கு மான நேரடி பஸ் சேவையை நடாத்துவதற்கு போக்கு வரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. தற்போது கொழும்பிலி ருந்து மதவாச்சி வரை மட்டுமே மட்டுப் படுத்தப்பட்டுள்ள இ. போ. ச. பஸ் சேவையை ஓமந்தை வரை விரிவுபடுத்துவ தற்குத் தீர்மானித்துள்ளதாக இ. போ. ச. பிரதம நிறைவேற்று அதிகாரி எம். கே. ஏ. டபிள்யூ. குணவர்தன தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் இச்சேவை நீடிப்பைத் தொடர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply