அரசு – கூட்டமைப்பு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குமிடையிலான பேச்சுவார்த்தை மீண்டும் இன்று ஆரம்பமாக உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. இதனை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரனும் உறுதி செய்தார்.

தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து அரசாங்க பிரதிநிதிகளுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதி களுக்குமிடையில் பல சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுள்ளன.

ஆனால் இதுவரை காணப்பட்ட இணக்கப்பாடுகளின் அடிப்படையில் த.தே. கூட்டமைப்பு எழுத்து மூலமான உறுதியை அரசாங்கத்திடம் கோரியதையடுத்து பேச்சுவார்த்தை முறிவடைந்தது.

அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குமிடையிலான 10 ஆவதும் இறுதியுமான பேச்சுவார்த்தை ஓகஸ்ட் நடுப்பகுதியில் நடைபெற்றது.

இரு தரப்பினருக்குமிடையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் அரசாங்கம் சார்பாக அமைச்சர்களான ஜீ.எல். பீரிஸ், நிமல் சிறிபால டி. சில்வா, பாராளுமன்ற உறுப்பினர்களான ரஜீவ விஜேசிங்க, சஜின் வாஸ் குணவர்தன ஆகியோரும் தமிழரசுக் கட்சி சார்பாக பாராளுமன்ற உறுப்பினர்களான ஆர். சம்பந்தன், மாவை சேனாதிராஜா சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ. சுமந்திரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் கே. கணேஷ்வரன் ஆகியோர் கலந்து கொள்வர்.

இன்றைய பேச்சுவார்த்தையின் போது என்ன விடயங்கள் ஆராயப்படுமென சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி.யிடம் வினவியதற்குப் பதிலளித்த அவர் மீண்டும் பேச்சு ஆரம்பிக்கப்பட்டுள்ள போதும் பேச்சுவார்த்தையில் ஆராயப்படும் விடயம் குறித்து தெரியவில்லை என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply