ஜனநாயக மக்கள் முன்னணியை தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும் : த. சித்தார்த்தன்
நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மனோ கணேசனின் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியை தமிழ் மக்கள் ஆதரிக்கவேண்டும் என்று தமிழ் மக்கள் விடுதலைக் கழகத்தின் புளொட் தலைவர் த. சித்தார்த்தன் கோரியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ்மக்களின் நியாயமான உரிமைகள், அபிலாசைகள் மறுதலிக்கப்பட்டு வரும் இன்றைய அரசியல் சூழ்நிலையில் நடைப்பெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் குறிப்பாக கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் தமிழ்க் கட்சியாக போட்டியிடும் ஜனநாயக மக்கள் முன்னணியை தமிழ் மக்கள் முழுமையாக ஆதரிப்பது அவசியமானதும் தவிர்க்கப்படக்கூடாததும் என நாம் கூறுகின்றோம்.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு அது வடக்கிலோ கிழக்கிலோ மலையகத்திலோ தலைநகரிலோ அநீதிகள் இழைக்கப்படும் போது அதற்கெதிராக குரல் கொடுப்பதுடன் களத்திலிறங்கி பணியாற்றும் தோழர் மனோ கணேசனையும் அவரது கட்சியையும் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் ஆதரிக்க வேண்டியது தமிழ் மக்களின் அவசிய கடமையென நாம் கருதுகின்றோம். குறிப்பாக கொழும்பு வாழ் தமிழ் மக்கள் தங்களின் அரசியல் இருப்பை தனித்துவத்துடன் தக்கவைத்துக்கொள்ளவும் தங்களுக்கான உரிமைகளை நிலை நிறுத்திக்கொள்ளவும் தமிழ் மக்களின் ஐக்கியத்தை என்றும் வலியுறுத்தி நிற்கும் ஜனநாயக மக்கள் முன்னணியியை ஆதரிப்பதே சரியான தேர்வாக இருக்கும்.
வடக்கில் அண்மையில் நடைப்பெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மகத்தான வெற்றிக்கு தமிழ் மக்களின் ஐக்கியத்தை வலியுறுத்தி தோழர் மனோ கணேசன் ஆற்றிய பங்கு அளப்பரியதாகும்.
இன்றியமையாததுமாகும். என்பதை நினைவு கூர்கின்றோம். தமிழ் மக்களின் உரிமைகளுக்கானவும் சுபிட்சமான வாழ்வுக்காகவும் துணிந்து தனது கருத்துக்களை ஆணித்தரமாக கூறியும் செயற்பட்டும் வரும் ஜனநாயக மக்கள் முன்னணியை ஆதரித்து தமிழ் மக்களின் பலத்தை நிரூபிக்க வேண்டுமென நாம் தமிழ் மக்களை வேண்டி நிற்கின்றோம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply