இலங்கையிலிருந்து ரஷ்யாவுக்கான நேரடி விமான சேவை ஆரம்பம்

சரித்திரத்தில் முதல்முறையாக மொஸ்கோவுக்கான விமானப் பயணத்தை ஸ்ரீ லங்கன் எயார்வேஸ் விமான சேவை இன்று  ஆரம்பிக்கிறது. இதன்படி கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்துக்கும் மொஸ்கோவின் டோம்டெடோவோ விமான நிலையத்துக்கும் இடையே வாராந்தம் இரு சேவைகள் இடம்பெறும்.

ஸ்ரீலங்கன் விமான சேவையின் யூஎல் 531 விமானம் இன்று காலை 7.20 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சரித்திரபூர்வமான முதலாவது மொஸ்கோ பயணத்தை ஆரம்பிக்கிறது. இன்றைய பயணத்தில் கலந்துகொள்ளும் பிரமுகர்கள் பட்டியலில் இலங்கையில் உள்ள ரஷ்ய தூதுவர் விலாடிமிர் பி. மிக்யாலோவ், திருமதி மிக்யாலோவ், ஸ்ரீ லங்கன் விமான சேவையின் வர்த்தக நடவடிக்கைகளுக்கான பொறுப்பதிகாரி மொஹமட் பசீல், ரஷ்யா மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவுக்கான பிராந்திய முகாமையாளர் லால் பெரேரா மற்றும் ஸ்ரீ லங்கன் விமான சேவையின் பிரதிநிதிகளும் அடங்குகின்றனர்.

இந்த விமானம் துபாய் வழியாக சென்று அதே தினம் பிற்பகல் 4.40 மணிக்கு மொஸ்கோவோ சென்றடையும்.

மொஸ்கோவில் மொஸ்கோ விமான நிலைய அதிகார சபையின் அதிகாரிகளும் மொஸ்கோவில் உள்ள இலங்கை சமூகத்தினரும் விமானத்தில் வரும் இலங்கை குழுவினரை வரவேற்பார்கள்.

மொஸ்கோவின் டோம்டெடொவோ விமான நிலையம் பயணிகள் போக்குவரத்து கணிப்பில் ரஷ்யாவின் மிகப்பெரிய விமான நிலையமாகும். 2010ஆம் வருட கணிப்பின்படி 2 கோடியே 22 இலட்சத்து 54 ஆயிரம் பயணிகள் இந்த விமான நிலையத்துக்கு ஊடாக பயணம் செய்துள்ளனர்.

2009ஆம் வருட எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது 19.2 சதவீத அதிகரிப்பாகும்.

மொஸ்கோவுக்கு தென்கிழக்கே 22 கிலோமீட்டர் தூரத்தில் டோம்டெடோவோ விமான நிலையம் அமைந்துள்ளது. உலகத்தில் உள்ள மிகவும் நவீனமான தொழில்நுட்ப வசதிகளை இந்த விமான நிலையம் கொண்டுள்ளது.

ஸ்ரீ லங்கா விமான சேவையின் மொஸ்கோவுக்கான புதிய சேவை ஆரம்ப கட்டமாக வாரத்தில் இருமுறை புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இடம்பெறும்.

இப்பயணத்துக்கு நவீன வசதிகளுடன் கூடிய எயார் பஸ் விமானம் பயன்படுத்தப்படவுள்ளது. சிறந்த பொழுதுபோக்கு சாதனங்களுடன் கூடிய வானொலி மற்றும் டி.வி வீடியோ வசதிகளும் இதில் அடங்குகின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply