நியாயமான அரசியல் தீர்வை எட்டுவதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கத் தயார்: முரளி மனோகர் ஜோஷி

இலங்கைக்கு இருநாள் திடீர் விஜயத்தை மேற்கொண்டு வருகை தந்திருந்த பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் இந்திய பாராளுமன்ற உறுப்பினருமான முரளி மனோகர் ஜோஷி நேற்று முன்தினம் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனை சந்தித்து உரையாடியதுடன் இலங்கையில் எட்டப்படும் நியாயமானதோர் அரசியல் தீர்வுக்கு தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்க தமது கட்சி தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளார்.

இலங்கைக்கு நேற்று முன்தினம் விஜயம் ஒன்றை மேற்கொண்டு வருகை தந்திருந்த இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாக கட்சியின் முக்கியஸ்தரும் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினருமான முரளி மனோகர் ஜோஷி பிரதமர் டி.எம். ஜயரட்ண மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் உட்பட முக்கிய அரசாங்க உயர்மட்ட தலைவர்களையும் சந்தித்து உரையாடியுள்ளார்.

முரளி மனோகர் ஜோஷியுடன் பி.ஜே.பி. கட்சியின் பத்திரிகை ஆசிரியரும் அரசியல் துறை உறுப்பினருமான ஷேஷாத்ரி ஸாரியும் உடன் வந்திருந்தார்.

இவர் இலங்கை அரசின் அழைப்பில் விஜயம் செய்திருந்ததுடன் வட பகுதிக்கும் விஜயத்தை மேற்கொண்டிருந்தார். அத்துடன் முக்கிய பிரமுகர்களை சந்தித்து சென்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கை வந்த ஜோஷி நேற்று முன்தினம் சனிக்கிழமை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் பேச்சாளர் ”சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரை சந்தித்து பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

இறுதியாக பிரதமரை சந்தித்த இந்திய பாராளுமன்ற உறுப்பினர் முரளி மனோகர் ஜோஷி நேற்று பிற்பகல் இந்தியா திரும்பினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply