கட்சிக்குள் எவ்வித கருத்து முரண்பாடும் இல்லை : சோமவன்ஸ

கட்சிக்குள் எந்தவித கருத்து முரண்பாடும் இல்லை என்றும் கட்சியிலுள்ள உறுப்பினர்கள் சிலர் கட்சியிலிருந்து பிரிந்து சென்று வேறு கட்சிக்குள் இணைந்துள்ளதாகவும் ஜே.வி.பி. யின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க  தெரிவித்தார். ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி) க்குள் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதுடன் கட்சிக்குள் எதிர்காலத்தில் பிளவு ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகளவு காணப்படுவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

கட்சியில் கடந்த காலங்களில் எடுத்த கூட்டமைப்பு சம்பந்தமான நடவடிக்கையினாலே சிறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும், இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பில் கட்சியின் மத்திய குழு ஆலோசித்து அதற்கேற்றவாறு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்று கட்சியின் உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரன் எமது இணையத்தளத்திற்குத் தெரிவித்தார். தற்போது முன்னெடுக் கப்படவுள்ள கலந்துரையாடல்களையடுத்து எதிர்காலத்தில் கட்சியிலுள்ள பதவிகளில் சில மாற்றங்கள் ஏற்படலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply