இனியும் அரசாங்கத்தை நம்ப முடியாது : ரணில்
இனியும், அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொள்ள முடியாது இருப்பதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரம சிங்க தெரிவித்துள்ளார்.பதுளையில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் பிரசார கூட்டம் ஒன்றின் போது, ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
2005ம் ஆண்டில் இருந்து இந்த அரசாங்கம் என்ன செய்திருக்கிறது? கடந்த ஒன்பது வருடங்களில், தொழில் வழங்கி இருக்கிறதா? பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதா? அரசாங்கத்தின் மீது எவ்வாறு நம்பிக்கை வைப்பது. இளைஞர்கள் எந்த அடிப்படையில் அரசாங்கத்தை நம்ப முடியும்;? ஏழைகளுக்கு அரசாங்கத்தில் இடமிருக்கிறதா?
கொழும்பில் ஏழைகளின் வீடுகளை உடைக்கிறது அரசாங்கம். அவர்களை வெளியேற்ற முயற்சிக்கிறது.இதற்கு மாற்று வழி, ஐக்கிய தேசிய கட்சியை ஆட்சிக்கு வரசெய்வதே ஆகும் என ரணில் விக்ரமசிங்க இதன் போது குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், நேற்றைய தினம் அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர் விமல் வீரவன்ச, நாட்டின் எதிர்கட்சிகள், அரசாங்கத்துக்கு சவாலாக அமையாது என சுட்டிக்காட்டினார்.
கடவுளே என்று, உள்நாட்டில் அரசாங்கத்துக்கு எந்த சவால்களும் இல்லை.எதிர்கட்சித் தலைவர், அரது கட்சியில் உள்ள பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்துகிறார்.ஏனைய உறுப்பினர்கள் கட்சியின் மூலஸ்தானத்தை பாதுகாக்க முயற்சிக்கின்றனர்.இவ்வாறு அவரவர் வேலைகளை அவரவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அரசாங்கம் மக்களுக்காக மேற்கொள்கொள்கின்ற வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் எந்த சவாலும் இல்லை. ஆனால் சர்வதேச ரீதியாக பல்வேறு சவால்கள் உள்ளன.ஆனால் அதனையும் அரசாங்கம் சமாளிக்கும் என அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply