புதிதாக அமைக்கப்பட்டுள்ள முகாம்களையும் இராணுவத்தினரையும் அகற்ற வேண்டும்: த.வி.கூ

வடக்கு கிழக்கில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களையும் இராணுவத்தினரையும் அகற்ற வேண்டும். இனப்பிரச்சினை தீர்வுக்கு அரசாங்கம் காலம் தாழ்த்தி வருவது கண்டிக்கத்தக்க விடயமாகும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் வருடாந்த தேசிய மாநாடு நேற்று யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கு வீதியிலுள்ள நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டணியின் செயலாளர் நாயகம் வி.ஆனந்தசங்கரி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் சிறிரெலோ கட்சியின் தலைவர் உதயராசா(உதயன்) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம.பி.க்களான சிவசக்தி ஆனந்தன், வினோதராதலிங்கம், புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் எம்.பி.யும் ரெலோ அமைப்பின் அரசியல் துறைப் பொறுப்பாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம், உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply