அவுஸ்ரேலியாவில் தனது குடும்பத்தை முதலாவது பிரஜைகளாக்கிய சிறிகாந்தா, இலங்கையில் தமிழர்கள் இரண்டாவது பிரஜைகளாக இருக்க விரும்பவில்லையென பாராளுமன்றத்தில் இன்று முழங்கினார்

அவுஸ்ரேலியாவில் தனது குடும்பத்தை முதலாவது பிரஜைகளாக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீகாந்தா, இலங்கையில் தமிழர்கள் இரண்டாவது பிரஜைகளாக இருக்க விரும்பவில்லையெனவும், கிளிநொச்சியை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளபோதும், போர் நிறுத்தம் செய்வதற்கு புலிகள் தயாராகவிருப்பதாகவும், இதனையே தமிழ் மக்கள் விரும்புவதாகவும் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற விவாதத்தில் அவர் கூறினார்.

வடபகுதியில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் மோதல்களில் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதில்லையென ஜனாதிபதி கூறியிருப்பதில் எந்தவிதமான உண்மையும் இல்லையெனவும், அங்கு நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டும், காயமடைந்தும் இருப்பதாகவும் அவர் கூறினார். “சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தை மதிக்காமல் செயற்பட்டுவரும் இலங்கை அரசாங்கம் விரைவில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்னால் நிறுத்தப்படும்” என்றார் அவர்.

தற்பொழுது நடைபெற்றுவரும் யுத்தம் இத்துடன் முடிவடைந்துவிடாது எனக் குறிப்பிட்ட சிறிகாந்தா, இது பாரிய யுத்தமாக வெடிக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்தார். “தமிழர்களுக்குத் தீர்வொன்றை வழங்குவதற்கு தென்னிலங்கை தயாரில்லையென்பது தெளிவாகியுள்ளது. தமிழர்கள் இலங்கையின் இரண்டாம் தரப் பிரஜைகளாகவிருக்க விரும்பவில்லை. நாங்கள் அடிமைகளாக இருக்கமாட்டோம். எமக்கு சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்தார்.

அரசாங்கம், விடுதலைப் புலிகளுடன் மாத்திரமே மோதவேண்டும் எனத் தெரிவித்த அவர், மக்களை அரசாங்கம் பாதிப்புக்குள்ளாக்கக் கூடாது எனக் கோரிக்கை விடுத்தார். மக்களை அரசாங்கம் பாதுகாக்க வேண்டுமாயின் போர்நிறுத்தம் ஒன்றுக்குச் செல்வதன் மூலமே அது சாத்தியப்படும் எனவும் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply