தெரிவுக்குழுவில் பங்குபற்றுவது தொடர்பில் சம்பந்தன் எம். பி விளக்கம்
பாராளுமன்றத் தெரிவுக் குழு என்ன அடிப்படையில் இருக்கும் என்பதைப் பொறுத்தே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அக்குழுவில் பங்குபற்றுவது பற்றி தீர்மானமெடுக்கும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் தெரிவித்தார். இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் இதற்கு பலரும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மேற்படி தெரிவுக்குழுவில் பங்குபெறப் போவதில்லையென ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பங்குபெறப்போவதாக வெளியான செய்தி தொடர்பில் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தெரிவுக்குழு தொடர்பில் அரசாங்கத்துக்கும் எமக்கும் இடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது. எங்களது கருத்தை அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளோம். காலப்போக்கில் அரசாங்கம் நாம் முன்வைத்த கருத்துக்களுக்கேற்ப பதிலளிக்கும் வகையிலேயே நாம் தெரிவுக்குழுவில் பங்கு பெறுவது குறித்து தீர்மானிப்போம் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply