கொழும்பு வாழ் மக்களை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளியேற்றப் போவதில்லை : ஜனாதிபதி
கொழும்பு வாழ் மக்களை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளியேற்றப்போவதில்லை. ஒரு கிராமத்தில் பிறந்தவன் என்ற வகையில் அக்கிராமத்திலிருந்து வெளியேற்றப்பட்டால் ஏற்படக்கூடிய வேதனைகளை தாம் அறிவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை,சோமாலியா, எதியோப்பியா போன்ற பெயர்களில் கொழும்பு வாழ் சேரிப்புற மக்களை அழைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவர்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காக பாரிய பரிணாமத்தை மேற்கொண்டு அழகான சுகாதார மயமான மாடி வீடுகளை அமைத்துக்கொடுக்க வேண்டிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை அலரிமாளிகையில் நடைபெற்ற விசேட சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார். அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
கொழும்பு நகர் வாழ் மக்கள் அனுபவிக்கும் வேதனைகள் எனக்கு நன்கு தெரியும். நான் ஆனந்தா கல்லூரியில் கல்வி கற்கும் போதே இத்துன்பங்களை கண்களால் கண்டறிந்துள்ளேன். நீண்டகாலமாக கொழும்பு மாநகர சபையை ஐக்கிய தேசியக் கட்சியே ஆண்டு வந்தது. ஆனால் இக்கட்சி மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க முயற்சிக்கவில்லை.
யுத்த வெற்றியின் பின்னர் பாதுகாப்பு அமைச்சின் உதவியுடன் கொழும்பு நகரின் துர்நாற்றத்தை இல்லா தொழித்தோம். கொழும்பு நகரை அழகு மயப்படுத்தப்படுவதற்காக பாரிய அளவிலான வேலைத் திட்டங்களையும் முன்னெடுத்துள்ளோம்.
கடந்த காலங்களில் பாரிய சவால்களை எதிர்கொண்ட எமக்கு கொழும்பு மாநகர சபையின் வெற்றியை கைப்பற்றிக் கொள்வதற்கு எவ்விதமான தடையும் கிடையாது என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply