படையதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டால் அவர்களை பாதுகாக்க நடவடிக்கை
படை அதிகாரிகளாக கடமையாற்றி தற்போது இராஜதந்திர பதவிகளை வகிக்கும் அதிகாரிகள் மீது கூடுதல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக முன்னாள் சட்ட மாஅதிபர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், இவர்களுக்கு இராஜதந்திர வரப்பிரசாதங்கள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே வெளிநாடுகளில் குறித்த படையதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
படையதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டால் அவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இலங்கை இராஜதந்திரிகளுக்கு எதிராக பிரயோகிக்கப்படும் அழுத்தங்களைப் போன்றே குறித்த நாடுகளைச் சேர்ந்த இராஜதந்திரிகளுக்கு எதிராகவும் அழுத்தங்களை பிரயோகிக்க நேரிடும் என நினைவுபடுத்த விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போதும் இலங்கைக்கு எதிராக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படலாம் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அழுத்தங்களை பிரயோகிக்கும் நாடுகளுக்கு உரிய தெளிவுபடுத்தல்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், போலியான பிரச்சாரங்களுக்கு அடிமையாகியுள்ள தரப்பினரை தெளிவுபடுத்துவது சுலபமானதல்ல என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply