அமைச்சரவையில் பாரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன ஜனாதிபதி உத்தேசம்

அமைச்சரவையில் பாரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் வருடத்தில் இந்த அமைச்சரவை மாற்றங்களை மேற்கொள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தேசித்துள்ளார்.சில அமைச்சுக்கள் புதிதாக இணைக்கப்படுவதுடன், சில அமைச்சுக்கள் இல்லாமல் செய்யப்பட உள்ளதாக சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் கிரக நிலை மாற்றத்திற்கு ஏற்ற வகையில் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜோதிடத்தில் மிகவும் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், ஜோதிட நிபுணர்களின் ஆலோசனைக்கு அமைய அடுத்த ஆண்டு அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
 
தற்போது வழங்கப்பட்டுள்ள அமைச்சுப் பொறுப்புக்களில் பல சிரேஸ்ட அமைச்சர்களுக்கு உடன்பாடு இல்லை எனவும், சிரேஸ்ட அமைச்சர்கள் தமது அதிருப்தியை ஏற்கனவே ஜனாதிபதியிடம் வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
பாதுகாப்பு, பெருந்தெருக்கள், துறைமுகம் மற்றும் விமானசேவை, நிதித் திட்டமிடல் ஆகிய அமைச்சுக்கள் தற்போது ஜனாதிபதியின் கீழ் நிர்வாகம் செய்யப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply