மக்களை வீதிக்கு அனுப்பும் முயற்சியில் அரசாங்கம் : ஐ.தே.க குற்றச்சாட்டு
அரசாங்கத்தின் நிகழ்ச்சி திட்டத்திற்கமைய, நகர அபிவிருத்தி திட்டத்திற்காக முதற்கட்டமாக கொழும்பில் சுமார் 3 ஆயிரத்து 529 குடியிருப்புக்களை இடிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் இது 54 ஏக்கர் காணியை சுவீகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித் திருப்பதை தெளிவாகக் காட்டுகின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
அரசாங்கம் சுவீகரிக்கும் காணிகளை வெளிநாடுகளுக்கு விற்பதற்கு திட்டம் தீட்டியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி மக்களுக்கு குடியிருப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது. ஆனால், அரசாங்கமோ குடியிருப்புகளை உடைத்து மக்களை வீதிக்கு தள்ளுகின்றது.
இதற்கமைய, மட்டக்குளிய கதிரானவத்தையில் 400, தெமட்டகொட காளிபுள்ள வத்த பகுதியில்- 335, ஹெவ்லொக் வீதி மாவுர பகுதியில் 120,; கொழும்பு -06, கொலம்பகே மாவத்தையில் 108, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மாவத்தையில் 6,468, கொழும்பு – 13 இல் ௨49, டொரிங்டனில் மற்றும் அப்பிள் வத்த பகுதியில் 1,048 குடியிருப்புகளை இடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply