நெதர்லாந்தில் விடுதலைப் புலி சந்தேக நபர்களுக்கெதிரான விசாரணைகளை அதே நீதவான்களே மேற்கொள்வர்

நெதர்லாந்தில் தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்களுக்கு எதிராக விசாரணைகளை நடத்தும் நீதவான்களை மாற்றுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு நிதி உதவிகளை வழங்கிய ஐந்து இலங்கையர்களுக்கு எதிராக நெதர்லாந்தின் ஹேக்கில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
இந்த விசாரணைகளை மேற்கொள்ளும் நீதவான்கள் பக்கச் சார்பாக செயற்படக் கூடும் எனவும், நீதவான்களை மாற்றுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
 
சந்தேக நபர்களின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி விக்டர் கோப்பினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது. எவ்வாறெனினும், இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
விசாரணைகளை மேலும் அரை மணித்தியாலத்திற்கு நீடிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை நீதவான்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என விக்டர் கோப் குற்றம் சுமத்தியிருந்தார்.
 
தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. எனினும், லபிய விடுதலைப் போராட்ட வீரர்களைப் போன்றே தமிழீழ விடுதலைப் புலிகளும் செயற்பட்டதாக சட்டத்தரணி விக்டர் கோப் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply