அரசாங்கம் குறிப்பிடும் எரிவாயு கதை ஒரு தேர்தல் வெடிக்குண்டு : ரணில்

அரசாங்கம் குறிப்பிடும் எரிவாயுக் கதை ஒரு தேர்தல் வெடிகுண்டாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கண்டி மத்திய சந்தைக் கட்டிடத்தின் முன் இடம்பெற்ற ஐக்கியதேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் பேசுகையில்,
தேர்தல் வெடி குண்டுகளை அடிக்கடி அரசாங்கம் போடுவதுண்டு. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா காலம் முதல் மன்னார் வளைகுடாப் பகுதியில் பெற்றோலிய வளம் இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அது இன்னும் சாத்தியமாக வில்லை. உலகில் பல பகுதிகளில் எரிவாயுக்கள் காணப்படுகின்றன. பசுபிக் பிராந்தியத்தில் சர்வசாதார ணமாகக் காணப்படுகிறது. ஆனால், வர்த்தக ரீதியில் அதனை வெளியெடுக்கும் முயற்சிகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. காரணம் சாதாரண எல்.பி. வாயு தயாரிப்பை விட இயற்கை வாயுவை வெளியே எடுப்பதற்கு அதிக செலவு ஏற்படுகிறது.

இதற்கு முன்னர் தேர்தல் காலத்தில் பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. 2,500 ரூபா சம்பள உயர்வு, ஜனாதிபதி முறையை அகற்றுதல் போன்ற வாக்குறுதிகளுக்கு என்ன நடந்தது. இதே விதம் தான் இந்த எரிவாயுக் கதையுமென்று அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply