பிரதான புலிச் சந்தேக நபர்கள் நால்வருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

இலங்கையில் வடக்கு, கிழக்கு யுத்தம் முடிந்த பின்னர் வவுனியா அகதிகள் முகாமில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்ட நான்கு பிரதான புலிச் சந்தேகநபர்கள் மீதான வழக்கு முடியும்வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரச புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே குற்றத் தடுப்புப் பிரிவினரால் குறித்த நான்கு புலிச் சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் மீது தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்துவைத்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டியுள்ளதென நீதிமன்றிற்கு அறிக்கை சமர்பித்து பொலிஸார் கூறியுள்ளனர்.

புலிகள் இயக்கத்தில் ஆயுதப் பயிற்சி பெற்று பல தாக்குதல்களை இவர்கள் புரிந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளதென பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களுக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதாக பொலிஸார் அறிவித்ததை ஏற்றுக் கொண்ட கொழும்பு நீதவான் நீதிமன்றம் சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply