புலிகள் நிதிச் சேகரிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பினர் மீண்டும் நிதிச் சேகரிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் இலங்கைக்கு எதிராக சர்வதேச நாடுகள் அழுத்தங்கள் பிரயோகித்து வரும் நிலையில், புலிகள் இந்த நிதி திரட்டல் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளனர்.
2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைவதற்கு முன்னதாகவே நிதி திரட்டல் நடவடிக்கைகள் முடங்கியிருந்தன. தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு நிதி திரட்டல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக புலனாய்வு மற்றும் வெளிவிவகார அமைச்சு தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
பொதுநலவாய நாடுகள் அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆகியவற்றில் இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படுத்த சில தரப்பினர் முயற்சித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை நிதி திரட்டுவது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு இடையில் முரண்பாடு நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply