மனோவையும், விக்கிரமபாகுவையும் தமிழர் ஆதரிப்பது பொருத்தமானது

உரிமைக் கொள்கைகளை நிலை நிறுத்துவதற்கான தமிழர் தேசிய அரசியலில் மனோ கணேசனையும், கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்னவையும் மறந்துவிட முடியாது. தமிழர்கள் இதனை ஏற்றுக்கொள்வார்களென நம்புகிறோம். இதனால்தான் ஜனநாயக மக்கள் முன்னணியை தமிழர்கள் ஆதரிப்பது பொருத்தமானதென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உறுதியாக நம்புகிறது. இவ்வாறு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளருமான மாவை சேனாதிராஜா நேற்று கல்முனையில் தெரிவித்தார்.

கல்முனை மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆதரவான பிரசாரக் கூட்டங்களில் ஈடுபடுவதற்காக வந்திருந்த மாவை, நேற்று பிற்பகல் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

தேர்தலில் எமது ஆதரவை ஆரம்பம் முதலே மனோ கணேசனும், விக்கிரமபாகு கருணாரட்னவும் கோரியிருந்தனர். தமிழர் பிரச்சினை தொடர்பான எமது கொள்கையுடன் அவர்கள் என்றுமே எம்முடன் செயற்பட்டு வந்தனர். எம்முடன் செயற்படுவோரில் இவர்கள் முதன்மையானவர்கள் என்றும் கூறலாம்.
தேர்தலில் தமிழர்கள் அவர்களை ஆதரிப்பார்களெனக் கூட்டமைப்பு நம்புகிறது. தமிழ் மக்கள் உணர்வுகளை நாம் எப்போதும் மதித்தே செயற்பட்டு வந்திருக்கின்றோம்.

எனவே, தொடர்ச்சியாக உரிமைக்குரல் கொடுத்துவரும் ஜனநாயக மக்கள் முன்னணியை விக்கிரமபாகுவை ஆதரிப்பதற்கு தமிழர்கள் தீர்மானிப்பார்களாயின், அதனை ஆதரிப்பது பொருத்தமானதென்றே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்புகிறது.இவ்வாறு தெரிவித்தார் மாவை சேனாதிராசா.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply