புலிகளின் பாடசாலைகள் குறித்து விசாரணை நடத்தப்படும் : நெதர்லாந்து
நெதர்லாந்தில் இயங்கி வரும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான பாடசாலைகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புக்களினால் சனிக்கிழமைகளில் இந்தப் பாடசாலைகள் நடத்தப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தப் பாடசாலைகளின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை செய்யப்படும் என நெதர்லாந்தின் பாதுகாப்பு அமைச்சர் ஐவோ ஒப்செல்ஸ்டன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் 21 பாடசாலைகள் இயங்கி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை போற்றும் வகையில் இந்தப் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாட்டின் கல்விமுறையின் கீழ் இந்தப் பாடசாலைகள் இயங்கவில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் கலாச்சாரத்தை போதிக்கும் நோக்கில் இந்தப் பாடாசலைகள் ஆரம்பிக்கப்பட்டது.
எவ்வாறெனினும், குறித்த பாடசாலைகளின் நடவடிக்கைகள் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply