ஐ.நா. சபையில் அரசின் தொடர்ச்சியான செயற்பாட்டால் நாடு பாதுகாக்கப்பட்டுள்ளது : ஜீ. எல். பீரிஸ்

ஐக்கிய நாடுகள் சபையில் அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுத்த நடவடிக்கைகளின் காரணமாக இன்று எமது நாடு முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இலங்கையில் புலிகள் ஒழிக்கப்பட்ட போதும் வெளிநாடுகளில் பாரியளவில் அது இயங்கி வருவதாகக் கூறிய அமைச்சர் இதனை முறியடிக்க வெற்றிகரமான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
வாய்மூல விடைக்காக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது: 2010ஆம் ஆண்டில் ஐ.நா மாநாட்டில் ஜனாதிபதி அடங்களான 30 பேர் கொண்ட குழு கலந்துகொண்டது. நான் 2010 டிசம்பர் முதல் இன்று வரை 17 நாடுகளுக்கு விஜயம் செய்துள்ளேன். இதில் அமெரிக்கா, இந்தியா, சிங்கப்பூர், தென்கொரியா, பிரிட்டன் என்பனவும் அடங்கும்.

கடந்த ஐ. நா. அமர்வில் இலங்கையின் மனித உரிமை தொடர்பில் பாரிய அழு த்தம் மேற்கொள்ளப்பட்ட போதும் எமது நாட்டை பாதுகாக்க முடிந்தது.

இலங்கையை மட்டம் தட்டுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சி தோற்கடிக்கப்பட்டது. இலங்கைக்கு எதிரான பிரேரணையொன்றை முன்வைக்க ஒருநாடு தயாரான போதும் பின்னர் அந்த நாடு அந்த முடிவை மாற்றிக் கொண்டது. பலமான நாடுகள் உட்பட அநேக நாடுகளுடன் நாம் பேச்சு நடத்தினோம்.

ஜனாதிபதி 25 நாடுகளுடன் பேசினார் இந்தப் பின்ன ணியிலே எமது நாட்டைப் பாதுகாக்க முடிந்தது. நாம் வெளிநாடுகளுக்கு பணம் செலவிட்டு சுற்றுலா செல்லவில்லை.

நாட்டைப் பாதுகாக்கவே சென்று வருகிறோம். ஜனாதிபதியின் ஐ.நா. விஜயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பாதுகாப்பு தரப்பினரின் தொகையை பாதுகாப்புக் காரணங்களுக்காக வெளியிட முடியாது. பெரிஸ் நீதிமன்றத்தினால் 21 புலிகள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதிக்கு கட்டாயம் உயரிய பாதுகாப்புத் தேவை அவருக்கு பாதுகாப்பு வழங்குவது தவறு என எந்தப் பிரஜையும் கூறமாட்டார்கள் என்றார்.

2010 டிசம்பர் முதல் வெளிவிவகார அமைச்சர் மேற்கொண்ட வெளிநாட்டு விஜயங்கள் பற்றி சுனில் ஹந்துன்னெத்தி எம்.பி. கேள்வி எழுப்பியிருந்தார். வெளிவிவகார அமைச்சர் தேவை நிமித்தமே வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறார் என்பதை நாம் அறிவோம். ஆனால் முன்பிருந்த சில வெளிவிவகார அமைச்சர்கள் வானத்திலே வாழ்ந்திருக்கிறார்கள் என சுனில் ஹந்துன்னெத்தி எம்.பி. கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply