இலங்கையில் பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் இருநூறு புதிய நவீன கேட்டுகள்

பாதுகாப்பற்ற ரயில் கடவைகளின் பாதுகாப்புக்காக முதற்கட்டமாக 200 கடவைகள் தெரிவு செய்யப்பட்டு அவற்றுக்கான ‘கேட்டு’கள் அமைக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்தார். ஜே.வி.பி. எம்.பி. சுனில் ஹதுன்நெத்தி கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்துப் பேசும் போதே அமைச்சர் குமார வெல்கம மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

2010 மே மாதத்திலிருந்து இன்று வரை போக்குவரத்து அமைச்சர், பிரதி அமைச்சர் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் யாவை? என்ற கேள்வியை சுனில் ஹதுன் நெத்தி எழுப்பிய போது அதற்கு பதிலளித்த அமைச்சர் குமார வெல்கம கூறுகையில்,

அமைச்சர் என்ற வகையில் இரண்டு தடவையும் பிரதி அமைச்சர் என்ற வகையில் இரண்டு தடவைகள் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டிருக்கிறோம். நான் சீனாவுக்கும், கொரியாவுக்கும் சென்றேன். சீன விஜயத்தின் போது நவீன தொழில்நுட்பத்துடனான ரயில் சமிக்ஞைகள் தொடர்பாக ஆராய்வதற்கும் அந்த தொழில்நுட்பத்தை இலங்கைக்கு அறிமுகம் செய்வது தொடர்பாகவும் ஆராய்ந்தோம் என்றார்.

இந்த பயணத்தின் ஊடாக எமது ரயில் போக்குவரத்துறைக்கு நவீன தொழில்நுட்பத்தை கொண்டுவருவது பற்றி ஆராயப்பட்டது. எமக்கு தென்கொரியாவிலிருந்து அதற்கான உதவிகள் கிடைக்கவுள்ளன என்றார்.

பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் தொடர்பில் நீங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என சுனில் ஹதுன்நெத்தி எம்.பி. கேட்ட போதே, முதற்கட்டமாக 200 ரயில் கடவைகளுக்கு மூங்கில் கதவுகள் அல்லாத நவீன தொழில்நுட்பத்துடனான கேட்டுகள் அமைக்கப்படும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply