பாரத கொலையில் பொலிஸ் மா அதிபர், சட்டமா அதிபர்; சுயாதீனமாக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாவிடின் பதவி விலக வேண்டும்

பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர உட்பட நால்வரின்; கொலை தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள துமிந்த சில்வாவுக்கு எதிராக, அரசியல் அழுத்தங்கள் காரணமாகவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட முடியாது இருக்குமாயின், அதற்கு எதிர்ப்புத்தெரிவித்து பொலிஸ் மா அதிபரும், சட்டமா அதிபரும் தமது பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு ஆசிய மனித உரிமை ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

கொலைச் சம்பவத்தை மூடிமறைக்க எவரும் முயலக் கூடாது. கொலையாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பதே அடிப்படையான நெறிமுறையாகும்.

பாரத லக்ஷஷ்மன் உட்பட 4 பேரின் கொலையுடன் துமிந்த சில்வா நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளார் என்ற சாட்சியங்கள் இருக்கும் நிலையில், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும் என்றும், குற்றவாளிகளுக்கு தராதரம் பாராது, தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நம்பிக்கையாகும்.

அரசும், அதன் உயர் அதிகாரிகளும் துமிந்த சில்வாவை பராமரிக்கும் விதம் மூலம் சமூகத்தின் நடுநிலை தன்மை நகைப்புக்குரியதாக மாறியுள்ளது என்றும் ஆசிய மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply