ஏழைகளுக்கு நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஜே.வி.பி

ஏழைகளுக்கு நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜே.வி.பி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. வரவு செலவுத் திட்டங்களில் அரசாங்கங்கள் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கத் தவறியுள்ளதாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் வரவு செலவுத் திட்டமும் அவ்வாறே அமையும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். எவ்வாறெனினும், மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்க உத்தேசித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பொதுத் துறை ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் எனவும், தனியார்துறை ஊழியர்களுக்கு 40 வீத சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட உள்ளதாகவும் இதன் முதல் கட்டமாக எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பில் போராட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply