இனசுத்திகரிப்பு, காணி சுவீகரிப்பு இடம் பெறின் மீள் இணக்கமோ, இணைந்து வாழவோ முடியாது: சம்பந்தன்
வடக்கு, கிழக்கில் காணி சுவீகரிப்பு, பெரும்பான்மையினக் குடியேற்றங்கள், தமிழ்க் கலாசாரங்களை சீரழிக்கும் நடவடிக்கைகள் தமிழின விகிதாசாரத்தை பாதிக்கும் நிகழ்வுகள் மற்றும் இன சுத்திகரிப்புகள் இடம்பெறுமாயின் மீள் இணக்கமோ, இனங்கள் இணைந்து வாழவோ, நல்லிணக்கத்தை ஏற்படுத்தவோ முடியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
சபையில் இருக்கின்றவர்களின் பலம் நியாயமானவர்கள் முன்னெடுக்கப்படும் பல விடயங்களை அவர்கள் அங்கீகரிக்கமாட்டார்கள். மேற்படி விவகாரம் தொடர்பில் பல தரப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நான் குற்றஞ்சாட்டவில்லை. அதற்காக அவரை குற்றஞ்சாட்டவும் முடியாது என்றும் கூறவில்லை.
அரசாங்கத்தின் விடயங்களை ஒருவர் ஒரு நாளைக்கு சாதிப்பார் அப்போது மஹிந்த ராஜபக்ஷ வெறும் பார்வையாளராக மட்டுமே இருப்பார். இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
சம்பந்தன் எம்.பி. பிரேரிக்கப்பட்டுள்ள ஒத்திவைப்புப் பிரேரணையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையாக தமிழ் மக்களைக் கொண்டுள்ள நாட்டின் வட , கிழக்கு பகுதியில் அப்பிரதேசங்களில் வாழ்கின்ற தமிழ் மக்களின் எதிர்கால நல்வாழ்வை மீள்சீரமைக்க முடியாத அளவுக்கு பாதிக்கின்றதும் அப்பிரதேசத்தின் தமிழ் பேசும் மக்களுக்கு நிரந்தரமான பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அப்பிரதேசத்தின் குடிநிலைப் புள்ளியியல் ஆக்கக் கூறுகளை மாற்றுகின்றதும் அப்பிரதேசங்களின் கலாசார மற்றும் மொழி ரீதியிலான அடையாளத்தில் மிக மோசமாக தாக்கத்தை ஏற்படுத்துகின்றதுமான இராணுவச் செயற்பாடுகள், அபிவிருத்தி நடவடிக்கைகள் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் சமய,கலாசார செயற்பாடுகள் மற்றும் நிர்வாக, அரசியல் நிகழ்ச்சித் திட்டங்களும் செயற்பாடுகளும் தொடர்பான பல விடயங்களை 2009 ஆம் ஆண்டு மே மாதம் போர் முடிவடைந்ததில் இருந்து பாராளுமன்றத்திலும் அதிமேதகு ஜனாதிபதியுடனும் இலங்கை அரசாங்கத்துடனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சி எழுப்பியுள்ளதாலும் அத்துடன்,
01.அரச காணி மற்றும் தனியார் காணி தொடர்பாக
02.அரசாங்கத்தின் வெளிப்படையான அல்லது மறைமுகமான அங்கீகாரத்துடன் ஆயுதப் படையினராலும் பெரும்பான்மைச் சமூகத்தினராலும் பலவந்தமாகவும் அதிகாரம் இன்றியும் காணிகள் கைப்பற்றப்படுதல்.
03. கடந்த காலத்தில் தம் வசம் வைத்திருந்த மற்றும் பயன்படுத்தியவையும் அவ்வாறு தம் வசம் வைத்திருப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் சட்ட ரீதியான உசித்தைக் கொண்டதுமான காணிகளை வைத்திருப்பதையும் பயன்படுத்துவதையும் தடை செய்தல்.
04. இராணுவ நோக்கங்களுக்காகவும் அபிவிருத்தி என்னும் பெயரில் பெரும்பான்மை சமுதாய உறுப்பினர்களுக்கு மாத்திரம் காணிகளைத் தன்னிச்சையாக ஒதுக்குவதுடன் இந்தப் பிரதேசத்தில் உள்ள ஆயிரக் கணக்கான தமிழ்க் குடும்பங்கள் காணியற்றவர்களாக இருக்கின்ற அதேவேளை, அத்தகைய ஒதுக்கீடுகளின் பலன்களை தமிழ் மக்களுக்குக் கிடைக்காமல் செய்தல்.
05.பெரும்பான்மைச் சமயம் மற்றும் கலாசார நோக்கங்களுக்காக காணிகளை எடுத்துக் கொள்ளுதல்.
06. தமிழ் மக்களால் வரலாற்று ரீதியாகப் பயன்படுத்தப்பட்ட சமய கலாசார தளங்களைப் பயன்படுத்துவதில் அவர்கள் மறுப்புக்கு உள்ளாக்கப்படுதல்.
07. அவர்களால் வரலாற்று ரீதியாகப் பயன்படுத்தப்பட்ட தமிழ் சமயத் தலங்களை அழித்தல்.
08. தமிழ் மக்களுக்கு குந்தகம் ஏற்படும் வகையில், தற்போதுள்ள நிர்வாக எல்லைகளில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நிர்வாக எல்லைகளில் அரசியல் ரீதியாக உந்தப்பட்ட மாற்றங்கள்.
09. நிர்வாகத்தை இராணுவ மயமாக்குதலும் அதன் விளைவாக சிவில் நிர்வாகத்தின் பயனுறுதியின்மையும்
10. தமிழ் மக்கள் தமக்குரிய அரசியல் அங்கீகாரத்தையும் ஏதேனும் வடிவிலான ஆட்சியை அடைந்து கொள்வதிலும் இருந்து தடை செய்து அவர்களின் ஜனநாயகத் தீர்ப்பை மதிக்காமலும் விடுதல்.
11. தனிப்பட்ட காணி உடைமைக்கான அடிப்படை உரிமை மீது கடுமையாக இடையூறு ஏற்படுத்தும் வகையில் தனிப்பட்ட காணி உடைமைகளைப் பதிவு செய்வது தொடர்பான புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகள் ஆகிய செயற்பாடுகள் காணப்படுவதாலும்,
அத்தகைய வேண்டுதல்களுக்கு எவ்வகையிலும் இலங்கை அரசு பதில் செயற்பாடு காட்டாதிருப்பதுடன் அத்தகைய சட்ட ரீதியான வேண்டுதல்களுக்கு வெறுமனே அக்கறையின்றியும் அலட்சியமாகவும் இருக்கவில்லையென்பதை தெளிவாகக் காட்டி அத்தகைய தீங்கான செயற்பாடுகளில் தொடர்ந்தும் ஈடுபடுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply