புலிகள் வன்னி மக்களை விடுவிக்ககோரி யாழ் மக்களால் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டது

வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழும் மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்வதற்கு புலிகள் அனுமதிக்க வேண்டும் எனக்கோரி யாழ்ப்பாணத்தில் நேற்று மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடைபெற்றது. பல நூற்றுக்கணக்கான பொது மக்கள் இதில் கலந்துகொண்டதாக அங்கிருநதுவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் கொட்டடிச் சந்தியிலிருந்து ஆரம்பமான ஊர்வலம் பிரதான வீதி, காங்கேசன்துறை வீதி, ஸ்ரான்லி வீதி உட்பட முக்கிய வீதிகள் வழியாகச் சென்று வேம்படி சந்தியை அடைந்ததும் முடிவுற்றது.
 
ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை வீதியின் இருமருங்கிலும் நின்று பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.

வன்னியில் புலிகளின் பகுதியில் வாழும் மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்வதற்கு அனுமதிக்கும்படியும் கிளிநொச்சியைக் கைப்பற்றிய இராணுவத்தினருக்கு நன்றி தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply