வடக்கில் மேற்கொள்ளும் காணிப் பதிவுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழக்கு தாக்கல்

வடக்கில் காணிப் பதிவுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை 24 ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கை தாக்கல் செய்யவுள்ளது.இது தொடர்பில் அரசாங்கத்தின் பதிலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்த்துள்ளது. எனினும் அது கிடைக்காது போனமையால்,, நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்தவாரம் அரசாங்கத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த விடயம் குறித்து பேசப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவு முல்லைத்தீவுடன் சேர்க்கப்பட்டமை மற்றும் மன்னாருக்கு சிங்கள அரசாங்க அதிபர் ஒருவர் நியமிக்கப்படுகின்றமை தொடர்பிலும் தாம் ஆட்சேபனையை வெளியிட்டதாக சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply