TNA யின் அமெரிக்க விஜயம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை உலகறியச் செய்யும்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்க விஜயம் தமிழ் மக்களின் பிரச்சினை களை உலகறியச் செய்யும் எனவும் எனவே இதனை வரவேற்பதாகவும் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவரும், தெஹிவளை கல்கிஸை மாநகர சபை உறுப்பினருமான கலா நிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெவித்துள்ளார்.
ஆனால் தமிழர்களை அழிப்பதற்கு உதவிய அமெரிக்காவின் செயற்பாடுகள் இவ்விடயத்தில் எந்தளவிற்கு உண்மையாக அமையுமென்பதை கூற முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
கூட்டமைப்பின் அமெரிக்க விஜயத்தினால் அந்நாட்டிலுள்ள உழைக்கும் வர்க்கத்தினர் மத்தியிலும், உலக உழைக்கும் வர்த்த கத்தினர் மத்தியிலும் தமிழர் பிரச்சினைகளை கொண்டு செல்லடியும்.
ஆனால் மேற்குலகம் மீது எமக்கு நம்பிக்கை கிடையாது. தமிழர்களை ஒழிப்ப தற்கு அமெரிக்கா முழு ஒத்துழைப்பையும் வழங்கியது. இலங்கை அரசாங்கம் அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாகும். என வேதான் ஒபாமா பட்டும் படாமலும் அறிக்கைகளை விடுகிறாறே தவிர கடுமையாக தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்க வேண்டுமென வலியுறுத்துவதில்லை. இது தான் உண்மை.
தமிழ் மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் எப்போதோ அமெக்கா வினால் அதனை பெற்றுக் கொடுத்திருக்க முடியும் எனவும் விக்ரமபாகு கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply